மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள்
மார்கழி மாதத்திற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மனிதருக்கு
மார்கழி மாதம் என்பது தேவருக்கு பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் விடியலுக்கு
முந்தைய பொழுது. அறிவியல் பார்வையிலும் மனிதரின் செயல்பாடுகள் பிரம்மமுகூர்த்த நேரத்தில்
மிகச்சிறப்பாக அமையும் என கண்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
எனவே மார்கழி மாதம் முழுதும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில்
(காலை 4 மணி முதல் 5.30 வரை) எழுந்து இறைவனை துதித்தல் என்பது பழக்கத்தில் இருந்துவருகிறது
இன்றும் மார்கழி மாதத்தின் முதல் நாளிலிருந்து தினம் ஒரு
பாடலாக மாதம் முழுவதும், திருப்பாவையின் 30 பாடல்களும் அதிகாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும்
பாடப்படுகிறது. முக்கியமாக 18 ஆம் நாள் ஆகிய
திருவாதிரை நட்சத்திரம் கூடிய நிறைமதி நாள் அன்று முதல் இறைவனுக்கு பள்ளி எழுச்சியும்,
அவன் நாமங்களைச் சொல்லி போற்றியும் பாடுவது வழக்கமாக இருக்கிறது.
No comments:
Post a Comment